உள்துறை அமைச்சகம்
நவீன காவல்துறை முன் முயற்சிகள்
Posted On:
26 MAR 2025 1:41PM by PIB Chennai
இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின்படி 'காவல்துறை' மற்றும் 'சட்டம் ஒழுங்கு' ஆகியவை மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டவையாகும். மேலும் மாநிலங்கள் தங்கள் காவல் துறைகளை நவீனமயமாக்குவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு மத்திய அரசு சிறப்புத் திட்டத்தின் கீழ் உதவி புரிந்து வருகிறது.
உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் மாநில/யூனியன் பிரதேச காவல் துறைகளை போதுமான அளவு தயார்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். காவல் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதோடு, நவீன தொழில்நுட்பங்கள், ஆயுதங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் போன்றவற்றை வழங்குவதன் மூலம் காவல்துறை உள்கட்டமைப்பை அதிநவீன அளவில் வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். ஏஎஸ்யூஎம்பி எனப்படும் திட்டத்தின் கீழ், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் ஒவ்வொரு ஆண்டும் நவீனமயமாக்கலுக்கான செயல்பாடுகளை மேற்கொள்கின்றன.
காவல் பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்காகவும், காவல்துறை, பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்துவதற்காகவும் செயல்திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஏஎஸ்யூஎம்பி வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன.
இணையதள குற்றப் புலனாய்வு, தடயவியல், வழக்கு தொடர்தல் போன்றவற்றின் முக்கிய அம்சங்களில் இணையதள பாடத்திட்டத்தின் மூலம் காவல்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 1,02,321-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 79,909 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணை அமைச்சர் திரு நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2115168)
TS/PLM/SG/KR
(Release ID: 2115231)
Visitor Counter : 21