நிதி அமைச்சகம்
பிராந்திய ஊரக வங்கிகள் 2023-24 நிதியாண்டில் ரூ. 7,571 கோடி லாபம் ஈட்டியுள்ளன; முக்கிய நிதிக் குறியீடுகள் நிலையான முன்னேற்றத்தைக் காட்டுகின்றன
Posted On:
25 MAR 2025 5:51PM by PIB Chennai
தேசிய மற்றும் பிராந்திய மட்டங்களில் பிராந்திய ஊரக வங்கிகளின் நிதி செயல்திறனை அரசு மதிப்பாய்வு செய்து வருகிறது. மறுஆய்வுக் கூட்டங்களுக்கான திட்ட உருப்படிகளில், பின்வருவன அடங்கும்:
*நிதி அளவுருக்கள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு குறித்த பிராந்திய கிராமப்புற வங்கிகளின் செயல்திறன் மதிப்பாய்வு.
*குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவன போர்ட்ஃபோலியோ மீதான உந்துதல்.
*வேளாண் சார்ந்த, குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவன மற்றும் சில்லறை விற்பனைத் துறைகளுக்கு கடன் பல்வகைப்படுத்தலின் முக்கியத்துவம்.
பிராந்திய ஊரக வங்கிகளின் நிதி ஆரோக்கியம் சமீபத்திய ஆண்டுகளில் மேம்பட்டுள்ளது, ஏனெனில் அவை 2023-24 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ .7,571 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளன. மேலும், இத்தகைய வங்கிகள் வைப்புத்தொகைகள், முன்பணங்கள், வாராக்கடன்கள் போன்ற முக்கிய நிதி அளவீடுகளில் நிலையான முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன. பிராந்திய ஊரக வங்கிகளின் முக்கிய நிதி அளவீடுகள் கடந்த ஆண்டுகளில் தொடர்ந்து மேம்பட்டுள்ளன. இவற்றின் மொத்த இருப்புநிலை அளவு 2021-22 நிதியாண்டில் ரூ.7,04,556 கோடியிலிருந்து 2023-24 நிதியாண்டில் ரூ.8,40,080 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும் நிகர வாராக்கடன் 2021-22 நிதியாண்டில் 4.7 சதவீதத்தில் இருந்து 2023-24 நிதியாண்டில் 2.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.
பிரதமரின் மக்கள் வங்கிக் கணக்குத் திட்டம், பிரதமரின் சுரக்ஷா பீமா திட்டம், பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா திட்டம், அடல் ஓய்வூதியத் திட்டம் போன்ற பல்வேறு நிதி உள்ளடக்கத் திட்டங்களின் செயல்திறனை ஆய்வு செய்து, ஊரக மற்றும் தொலைதூரப் பகுதிகளில் நிதி உள்ளடக்கத்தை ஆழப்படுத்துவதில் பிராந்திய ஊரக வங்கிகளின் முன்னேற்றம் குறித்து அரசு ஆய்வு செய்தது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் நிதித்துறை இணையமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2114942
----
RB/DL
(Release ID: 2115095)