ஊரக வளர்ச்சி அமைச்சகம்
அமிர்த நீர்நிலைகள் திட்டம்
Posted On:
25 MAR 2025 5:00PM by PIB Chennai
அமிர்த நீர்நிலைகள் திட்டமானது ஏப்ரல் 2022-ல் நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 வீதம் மொத்தம் 50,000 அமிர்த நீர்நிலைகள் (குளங்கள்) கட்டுவது அல்லது புதுப்பிப்பது என்ற லட்சிய இலக்குடன் தொடங்கப்பட்டது.
20-03-2025 நிலவரப்படி, 68,000 க்கும் மேற்பட்ட அமிர்த நீர்நிலைகளுக்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை 2487 அமிர்த நீர்நிலைகள் தொடர்பான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களுடன் ஒருங்கிணைந்து இது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பருவநிலை மாற்றத்தைச் சமாளித்தல், சுற்றுச்சூழல் சமநிலையை வளர்ப்பது மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு நன்மைகளை வழங்குவது ஆகியவற்றை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் திரு கமலேஷ் பாஸ்வான் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/PLM/SG/KR/DL
(Release ID: 2114977)
Visitor Counter : 25