கூட்டுறவு அமைச்சகம்
புதிய கூட்டுறவு சங்கங்கள்
प्रविष्टि तिथि:
25 MAR 2025 1:36PM by PIB Chennai
நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தவும், அடித்தள நிலை வரை அதனை விரிவுபடுத்தவும் திட்டம் ஒன்றுக்கு மத்திய அரசு 2023 பிப்ரவரி 13 அன்று ஒப்புதல் அளித்தது. நாடு முழுவதும் 5 ஆண்டு காலத்திற்கு அனைத்து பஞ்சாயத்துகள் மற்றும் கிராமங்களில் உள்ள புதிய பன்னோக்கு தொடக்க வேளாண் கடன் சங்கங்கள், பால்வள, மீன்வள கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்படுவதை உள்ளடக்கியதாக இந்தத் திட்டம் உள்ளது. நபார்டு, தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம், தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் மற்றும் மாநில அரசுகளின் ஆதரவுடன் இது அமலாக்கப்படுகிறது.
கூட்டுறவுகள் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர்களிடையே சுய வேலைவாய்ப்பை அதிரிக்க கூட்டுறவு அமைச்சகத்தின் அதிகாரபூர்வ அமைப்பான தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் கீழ்காணும் திட்டங்களை செயல்படுத்துகிறது.
1) சுயம் சக்தி சஹாக்கர் திட்டம் - மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் மற்றும் முன்பணம் வழங்க வேளாண் கடன் சங்க ங்களின் உதவியை பெற்றுத்தருவது இதன் நோக்கமாகும்.
2) நந்தினி சஹாக்கர் – மகளிர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெண்களின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும்.
3) யுவ சஹாக்கர் - புதிய அல்லது கண்டுபிடிப்பு சிந்தனைகளுடன் புதிதாக கூட்டுறவு சங்கங்களை அமைப்பதை நோக்கமாகக் கொண்டது இந்தத் திட்டம்.
இன்று மக்களவையில் மத்திய கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா, கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2114745
----
TS/SMB/KPG/KR
(रिलीज़ आईडी: 2114900)
आगंतुक पटल : 58