சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மனநல மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
Posted On:
25 MAR 2025 1:48PM by PIB Chennai
ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் தேசிய சுகாதார நலத் தொகுப்பில் 22 சிகிச்சைகள் மனநலத்துக்காக வழங்கப்படுகிறது. இதில் அறிவுசார் இயலாமை, ஸ்கிசோஃப்ரினியா, ஸ்கிசோடைபால், மருட்சி கோளாறுகள், ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு போன்ற மனநல பாதிப்புகள் அடங்கும். மேலும், சுகாதார நல உதவித் தொகுப்புகளை உள்ளூர் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்க மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய சுகாதார ஆணையத்தின் (NHA) மைய தரவுகளின்படி, 21.03.2025 நிலவரப்படி, சுகாதார பலன் தொகுப்பு (ஹெச்.பி.பீ.)திட்டத்தின் கீழ் 87 கோடி ரூபாய் மதிப்பிலான 77,634 மருத்துவமனை சேர்க்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் குறைந்த செலவிலான மற்றும் அணுகக்கூடிய மனநல சுகாதார வசதிகளை வழங்குவதற்காக, நாட்டில் தேசிய மனநலத் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியான மாவட்ட மனநலத் திட்டத்தை 767 மாவட்டங்களில் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, இதற்காக மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு தேசிய சுகாதார குழுமம் மூலம் ஆதரவு வழங்கப்படுகிறது.
தேசிய மனநலத் திட்டத்தின் மூன்றாம் நிலை கவனிப்புத் திட்டத்தின் கீழ், முதுநிலை மனநல சிறப்புப் பிரிவுகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், உயர்நிலை சிகிச்சை வசதிகளை அளிக்கவும் 25 உயர் தனிச் சிறப்பு மையங்களை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மனநல சிறப்பு பிரிவுகளில் 47 முதுநிலை துறைகளை வலுப்படுத்த 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் / நிறுவனங்களுக்கு அரசு ஆதரவளித்துள்ளது.
நாட்டில் 47 அரசால் நடத்தப்படும் மனநல மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் 3 மத்திய மனநல நிறுவனங்கள் ஆகும்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் இதனைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2114756)
TS/PLM/SG/KR
(Release ID: 2114860)
Visitor Counter : 31