சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிராமப்புறங்களில் சுகாதார நிபுணர்களை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

Posted On: 25 MAR 2025 1:45PM by PIB Chennai

ஊரகப் பகுதிகளில் மற்றும் தொலை தூரப் பகுதிகளில் பணியாற்றும் மகப்பேறு மருத்துவர்கள் / அவசர மகப்பேறு பராமரிப்பு பயிற்சி பெற்றவர்கள், குழந்தைகள் நல மருத்துவர்கள் / மயக்கவியல் நிபுணர் / உயிர் காக்கும் மயக்கவியல் திறன் பயிற்சி பெற்ற மருத்துவர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்வதற்கு சிறப்பு மருத்துவர்கள் கிடைப்பதை அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தொலைதூரப் பகுதிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு முதுநிலை படிப்புகளில் முன்னுரிமை சேர்க்கை மற்றும் கிராமப்புறங்களில் தங்குமிட ஏற்பாடுகளை மேம்படுத்துதல் போன்ற பணமல்லாத ஊக்க நடவடிக்கைகள் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறையைசா சமாளிக்க தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் பன்முகத்திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.

நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சுகாதார நிபுணர்களின் விவரங்கள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இணையதளமான https://mohfw.gov.in/sites/default/files/.pdf என்ற தளத்தில் இடம் பெற்றுள்ளன.

கிராமப்புறங்களில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது உட்பட பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்த மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தொழில்நுட்ப மற்றும் நிதி ஆதரவை வழங்குகிறது. இத்திட்டத்திற்கான நிதி ஒப்புதலை மத்திய அரசு நடவடிக்கைகளின் பதிவேடு வடிவில் விதிமுறைகள் மற்றும் கிடைக்கக்கூடிய ஆதாரங்களின்படி வழங்குகிறது. விவரங்கள் இந்த இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளன. https://nhm.gov.in/index1.php

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு. பிரதாப்ராவ் ஜாதவ் இதனைத் தெரிவித்தார்.

***

(Release ID: 2114753)

TS/PLM/SG/KR

 


(Release ID: 2114822) Visitor Counter : 28


Read this release in: English , Urdu , Hindi