கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடல்சார் மின்னணுமயமாக்கல், கார்பன் குறைப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பதற்கான உத்தேச ஒப்புதல் ஆவணத்தில் சிங்கப்பூரும், இந்தியாவும் கையெழுத்திட்டன

Posted On: 25 MAR 2025 12:53PM by PIB Chennai

கடல்சார் மின்னணுமயமாக்கல், கார்பன் குறைப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பதற்கான உத்தேச ஒப்புதல் ஆவணத்தில்  சிங்கப்பூரும், இந்தியாவும் கையெழுத்திட்டன. இதற்கான ஒப்புதல் ஆவணத்தில்  மத்திய துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால்,  சிங்கப்பூர் நாட்டின் நீடித்த மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. திரி அமி கோர் முன்னிலையில் துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து   மற்றும் நீர்வழிகள் துறை இணைச் செயலாளர் திரு ஆர்.லட்சுமணன், சிங்கப்பூர் துறைமுக ஆணையர் மற்றும் கடல்சார் துறையின் முதன்மை பிரதிநிதி திரு டியோ இங் திஹ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்த முயற்சிக்கு பங்களிக்கக்கூடிய தொடர்புடைய பங்குதாரர்களை அடையாளம் காண்பது உட்பட கடல்சார் மின்னணுமயமாக்கல் மற்றும் கார்பன் குறைப்புத் திட்டங்களில் இரு தரப்பினரும் ஒத்துழைத்து செயல்பட வழிவகுக்கும். மேலும் சிங்கப்பூர்-இந்தியா பசுமை மற்றும் மின்னணு கப்பல் வழித்தடம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கூட்டாண்மையை முறைப்படுத்த வகை செய்யப்படும்.

***

(Release ID: 2114721)
TS/IR/RR/KR


(Release ID: 2114766) Visitor Counter : 34