மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
கால்நடை காப்பீட்டுத் திட்டம்
Posted On:
25 MAR 2025 12:47PM by PIB Chennai
மாநிலங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, நடப்பு நிதியாண்டில் மொத்தம் 21.01 லட்சம் கால்நடைகள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன.
தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் கால்நடை காப்பீட்டு நடவடிக்கை தேவை அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. கால்நடை காப்பீட்டுத் திட்ட கருத்துருக்களை அனுப்புமாறு இத்துறை மாநில அரசுகளை ஊக்குவித்து வருகிறது. இதனால் அதிக எண்ணிக்கையிலான கால்நடைகள் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுகிறன.
நாட்டில் தமது வாழ்வாதாரத்திற்காக கால்நடைகள் மற்றும் கால்நடை வளர்ப்பை சார்ந்துள்ள மக்களின் எண்ணிக்கை குறித்த எந்தவொரு தரவையும் துறை பராமரிக்கவில்லை. இருப்பினும், 19வது கால்நடை கணக்கெடுப்பின்படி, 10.08 கோடி குடும்பங்கள் கால்நடைகள் மற்றும்/அல்லது கோழிகளை வளர்க்கின்றனர்.
விவசாயிகளிடையே கால்நடை காப்பீட்டு நடவடிக்கையை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து பிரிவுகள் மற்றும் பகுதிகளுக்கான பயனாளிகளுக்கான காப்பீட்டு பிரீமியம் தற்போதுள்ள 20 - 50 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது; மீதமுள்ள செலவினத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் மலைப்பிரதேசங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு 90:10 என்ற விகிதத்திலும், மலைப்பிரதேசங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் நீங்கலாக மற்ற மாநிலங்களுக்கு 60:40 என்ற விகிதத்திலும், யூனியன் பிரதேசங்களுக்கு 100% என்ற விகிதத்திலும் ஏற்கும். மேலும், கருத்தரங்குகள் மற்றும் முகாம்கள், விளம்பரம், காணொலி காட்சிகள் போன்ற விரிவான விழிப்புணர்வுகளை இத்துறை நடத்தி வருகிறது. இதற்காக கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை மாநில அரசுகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உதவி செய்து வருகிறது.
இந்தத் தகவலை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல் 2520 மார்ச் 25 அன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
***
(Release ID: 2114716)
TS/IR/RR/KR
(Release ID: 2114762)
Visitor Counter : 26