மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
நோய்க் கண்காணிப்பு
प्रविष्टि तिथि:
25 MAR 2025 12:48PM by PIB Chennai
நோய்க் கண்காணிப்பு, தடுப்பு, கட்டுப்படுத்துதல் போன்றவற்றுக்கு நோய் எதிர்ப்பு மருந்துகளை மத்திய அரசு கீழ்காணும் வகைகளில் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துகிறது.
பறவைக் காய்ச்சல் மற்றும் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களைக் கண்காணிக்கும் பொறுப்பை ஐசிஏஆர் அமைப்பின் கால்நடை அறிவியல் கல்விக் கழகங்கள் மேற்கொண்டுள்ளன. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம்- கால்நடை நோய் பரவல் மற்றும் நோய் தகவல் குறித்த தேசிய கல்விக்கழகமானது செயற்கை நுண்ணறிவு, எந்திரக் கற்றல் முறைகள் போன்றவற்றைப் பயன்படுத்தி நோய் அபாயம் குறித்த முன்னெச்சரிக்கைகளைச் செய்கின்றது. ஐசிஏஆர் – நிவேதியின் நாட்ரஸ் வி2 இணையப்பக்கம் மற்றும் டிஏஎச்டி இணையப்பக்கம் உள்ளிட்டவற்றில் ஒவ்வொரு மாநிலத்திற்குமான மாதாந்திர அடிப்படையிலான முக்கியமான நோய்கள் குறித்த தகவல்கள் பதிவிடப்படுகின்றன.
கால்நடை சுகாதாரம் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கான கோமாரி நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசின் 100 சதவீத நிதியுதவி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்படுகிறது. இத்தகைய தடுப்பூசிகள் செலுத்துவது நோய் எதிர்ப்பு மருந்துகள் பயன்படுத்துவதைக் குறைக்கிறது.
மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு, பால்வளத்துறை இணையமைச்சர் பேராசிரியர் எஸ் பி சிங் பாகல் இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2114717
---
TS/SMB/KPG/KR
(रिलीज़ आईडी: 2114760)
आगंतुक पटल : 46