நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் காலியாக உள்ள இரண்டு உறுப்பினர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
Posted On:
25 MAR 2025 12:33PM by PIB Chennai
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் கீழ் நிறுவப்பட்ட பகுதி நீதிமன்ற அமைப்பான தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் காலியாக உள்ள இரண்டு உறுப்பினர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் உள்ள நுகர்வோர் விவகாரங்கள் துறை விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இந்த ஆணையத்தின் தலைமையகம் புது தில்லியில் உள்ளது. நுகர்வோர் விவகாரங்கள் துறை ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
நியமனத்திற்கான கல்வித் தகுதி, ஏனைய தகுதிகள், சம்பளம் மற்றும் பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஆகிய அனைத்தும் தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டம் மற்றும் தீர்ப்பாயம் (சேவை நிபந்தனைகள்) விதிகள், 2021 - க்கு உட்பட்டதாகும்.
இந்தப் பதவிக்கு நியமனம் செய்வதற்கான விண்ணப்பதார்களைப் பரிந்துரைப்பதற்காக தீர்ப்பாய சீர்திருத்தங்கள் சட்டம் 20210-ன் கீழ் அமைக்கப்பட்ட தேடல் மற்றும் தேர்வுக் குழு, விண்ணப்பதாரர்களின் தகுதி மற்றும் அனுபவத்திற்கு உரிய முக்கியத்துவம் அளித்து விண்ணப்பங்களை ஆய்வு செய்யும். தகுதி, அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் குழு தேர்ந்தெடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும். விண்ணப்பதாரர்களின் ஒட்டுமொத்த மதிப்பீட்டின் அடிப்படையில் இறுதித் தேர்வு செய்யப்படும்.
தீர்ப்பாயங்கள் சீர்திருத்தச் சட்டம், 2021, தீர்ப்பாயங்கள் (சேவை நிபந்தனைகள்) விதிகள், 2021 மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையங்கள்) விதிகள் ஆகியவை அமைச்சகத்தின் இணையதளமான www.consumeraffairs.nic.in -ல் உடனடி குறிப்புக்காக இடம் பெற்றுள்ளன.
தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 25.03.2025 முதல் https://jagograhakjago.gov.in/ncdrc மூலம் ஆன்லைனில் கோரப்படுகிறது. விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள் 23.04.2025 ஆகும். ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் நகல் பரிந்துரைக்கப்பட்ட ஆவணங்களுடன் நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர், அறை எண் 466-ஏ, கிருஷி பவன், புதுதில்லி என்ற முகவரியில் 2025 ஏப்ரல் 23-க்குள் சமர்ப்பிக்கப்படலாம்.
***
(Release ID: 2114703)
TS/IR/RR/KR
(Release ID: 2114732)
Visitor Counter : 30