நிதி அமைச்சகம்
நிதி நடவடிக்கை பணிக்குழு தனியார் துறை ஒத்துழைப்பு மன்றம் 2025, மார்ச் 25 முதல் 27 வரை மும்பையில் நடைபெறும்
Posted On:
24 MAR 2025 5:05PM by PIB Chennai
நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்.ஏ.டி.எஃப்) தனியார் துறை ஒத்துழைப்பு மன்றம் (பி.எஸ்.சி.எஃப்) 2025, மும்பையில் 2025 மார்ச் 25 முதல் 27 வரை நடைபெறும். பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவியை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய முயற்சிகளில் இந்தியாவின் பொறுப்பான தலைமையை மீண்டும் உறுதிப்படுத்தும் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை இந்த மன்றத்தை நடத்துகின்றன.
எஃப்.ஏ.டி.எஃப் தலைவர் திருமதி எலிசா டி ஆண்டா மட்ராசோ, மார்ச் 26 அன்று பி.எஸ்.சி.எஃப் 2025 ஐ முறையாகத் தொடங்கி வைப்பார், இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு சஞ்சய் மல்ஹோத்ரா இந்த நிகழ்வுக்குத் தலைமை தாங்குவார். பி.எஸ்.சி.எஃப்-க்கான இந்தியக் குழுவில் நிதி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் (வருவாய்) திரு. விவேக் அகர்வால் தலைமையிலான பல்துறை வல்லுநர் குழு இடம்பெற்றுள்ளது.
எஃப்.ஏ.டி.எஃப் முன்முயற்சிகளில் இந்தியாவின் பங்கேற்பு பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியா எஃப்.ஏ.டி.எஃப்-இன் வழிகாட்டும் குழுவில் உறுப்பினராக உள்ளது மற்றும் அபாயங்கள், போக்குகள் மற்றும் வழிமுறைகள் பணிக்குழுவின் இணைத் தலைவராகவும் உள்ளது. நவம்பர் 2024 இல், பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்துப் போராடுவது குறித்த யூரேசிய குழுவின் முழுமையான மாநாட்டை இந்தியா இந்தூரில் நடத்தியது. ஜூன் 2024 இல், இந்தியாவின் எஃப்.ஏ.டி.எஃப் பரஸ்பர மதிப்பீட்டு அறிக்கை சிங்கப்பூரில் உள்ள எஃப்.ஏ.டி.எஃப் மாநாட்டில் தாக்கல் செய்யப்பட்டு பின்னர் செப்டம்பர் 2024 இல் வெளியிடப்பட்டது.
பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவியைத் தடுப்பதில் இந்தியாவின் முன்மாதிரியான முயற்சிகள், நாட்டின் மேம்பட்ட நிதிநுட்ப சூழல், ஒருங்கிணைந்த கட்டண இடையீடு (யு.பி.ஐ) மற்றும் ஆதார் அடிப்படையிலான டிஜிட்டல் அடையாள சரிபார்ப்பு போன்ற புதுமைகள் மற்றும் செயலில் உள்ள நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு ஆகியவற்றை இந்த அறிக்கை பாராட்டியது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2114453
***
RB/DL
(Release ID: 2114633)
Visitor Counter : 27