கலாசாரத்துறை அமைச்சகம்
புதுதில்லியில் யுகே யுகீன் பாரத் தேசிய அருங்காட்சியகம்
Posted On:
24 MAR 2025 4:01PM by PIB Chennai
புதுதில்லியில் யுகே யுகீன் பாரத் தேசிய அருங்காட்சியகம் என்ற பெயரில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இது நாடாளுமன்ற புதிய கட்டட வடிவமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான நாகரீக, கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் புதிய தேசிய அருங்காட்சியகம் அமையும். இத்ன தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக தேசிய அருங்காட்சியகம் மற்றும் பிரான்ஸ் அருங்காட்சியகங்கள் இடையே 2024 டிசம்பர் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இத்திட்டத்திற்கான கால அவகாசம் மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகியவை சாத்தியக்கூறு ஆய்வுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
இந்தத் திட்டம் நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தை காட்சிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டின் தொன்மையான கலாச்சாரப் பெருமையை பறைச்சாற்றும் வகையிலும் எதிர்காலம் குறித்த கற்பனை வளத்தை எடுத்துக் காட்டும் வகையிலும் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட உள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
-----
TS/SV/KPG/KR/DL
(Release ID: 2114593)