ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற கேள்வி: ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஆய்வுத் தகவல்கள்

Posted On: 24 MAR 2025 12:21PM by PIB Chennai

ஆகஸ்ட் 2019 முதல், நாட்டின் ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் போதுமான அளவில், பரிந்துரைக்கப்பட்ட தரத்தில் குடிநீர் வழங்குவதற்காக மாநிலங்களுடன் இணைந்து ஜல் ஜீவன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. நீர் ஒரு மாநில விஷயமாக இருப்பதால், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், குடிநீர் வழங்கல் திட்டங்கள் / பணிகளை திட்டமிடுதல், ஒப்புதல், செயல்படுத்துதல், இயக்குதல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றின் பொறுப்பு மாநில / யூனியன் பிரதேச அரசுகளிடம் உள்ளது. மத்திய அரசு மாநிலங்களுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்கி உதவுகிறது.

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் குழாய் இணைப்புகள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக, ஜல் சக்தி அமைச்சகம் இணையதளத்தை உருவாக்கியுள்ளது, இது மாநிலம் / யூனியன் பிரதேசம், மாவட்டம் மற்றும் கிராம வாரியாக தகவல்களை வழங்குகிறது.

இதற்கான இணையதள இணைப்பு https://ejalshakti.gov.in/jjmreport/JJMIndia.aspx

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு வி. சோமண்ணா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

TS/PLM/LDN/KR/DL


(Release ID: 2114586) Visitor Counter : 16


Read this release in: English , Urdu , Hindi , Bengali