எரிசக்தி அமைச்சகம்
முக்கியமான கனிமங்களுக்கான விநியோகச் சங்கிலி மேலாண்மை
प्रविष्टि तिथि:
24 MAR 2025 4:50PM by PIB Chennai
தேசிய அளவிலான முக்கிய கனிமங்கள் இயக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஜனவரி 29, 2025 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. முக்கியமான கனிமங்களின் நீண்டகால நிலையான விநியோகத்தைப் பாதுகாப்பதை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கனிம ஆய்வு, சுரங்கம் என அனைத்து நிலைகளையும் உள்ளடக்கிய இந்தியாவின் முக்கியமான கனிம மதிப்பு சங்கிலிகளை இது வலுப்படுத்துகிறது. 'உள்நாட்டு முக்கிய கனிம உற்பத்தியை அதிகரித்தல்' மற்றும் 'வெளிநாடுகளில் முக்கியமான கனிம சொத்துக்களை கையகப்படுத்துதல்' ஆகியவையும் இந்த இந்த இயக்கத்தில் அடங்கும்.
வெளிநாட்டு கனிம சொத்துக்களை கையகப்படுத்துவதற்காக, சுரங்க அமைச்சகம் கனிஜ் பிதேஷ் இந்தியா லிமிடெட் என்ற கூட்டு முயற்சி நிறுவனத்தை நிறுவியுள்ளது. அர்ஜென்டினாவில் 15703 ஹெக்டேர் பரப்பளவில் ஐந்து லித்தியம் உப்பு தொகுதிகளை ஆய்வு செய்து சுரங்கப்படுத்துவதற்காக அர்ஜென்டினாவின் கேடமார்கா மாகாணத்தின் அரசுக்கு சொந்தமான நிறுவனமான கேமியனுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
தேசிய கனிம மேலாண்மையில் முக்கியமான கனிம பதப்படுத்தும் பூங்காக்கள் அமைக்க 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மறுசுழற்சிக்காக 1500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/PLM/LDN/DL
(रिलीज़ आईडी: 2114576)
आगंतुक पटल : 28