கலாசாரத்துறை அமைச்சகம்
தேசிய பண்பாட்டு வரைபட இயக்கம்
Posted On:
24 MAR 2025 3:59PM by PIB Chennai
நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்து ஊக்குவிக்கும் கலாச்சாரப் பரிமாற்றத் திட்டத்திற்கான தேசிய இயக்கத்தை மத்திய கலாச்சார அமைச்சகம் நிறுவியுள்ளது. இந்திரா காந்தி தேசிய கலை மையத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த இயக்கம், இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தையும் கிராமப்புற பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செயவதற்கான திறனையும் ஆவணப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
விடுதலைக் கொண்டாட்ட பெருவிழாவின் ஒரு பகுதியாக 2023 ஜூன் மாதத்தில் எனது கிராமம் எனது பாரம்பரியம் என்ற இணையதளம் ஏற்படுத்தப்பட்டது. இந்த முயற்சி நாட்டில் உள்ள 6.5 லட்சம் கிராமங்களின் கலாச்சார பாரம்பரியத்தை ஆவணப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது 4.5 லட்சம் கிராமங்களின் கலாச்சாரத் தகவல்கள் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
வாய்வழி மரபுகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், வரலாற்று முக்கியத்துவம், கலை வடிவங்கள், பாரம்பரிய உணவுகள், முக்கிய கலைஞர்கள், கண்காட்சிகள் மற்றும் திருவிழாக்கள், பாரம்பரிய உடைகள், ஆபரணங்கள் மற்றும் உள்ளூர் அடையாளங்கள் ஆகியவற்றை விரிவான அளவில் கலாச்சார அம்சங்களுடன் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் விளிம்புநிலை சமூகங்களின் கலாச்சார வெளிப்பாடுகள், நாடு முழுவதும் அதிகம் அறியப்படாத பாரம்பரியங்கள் குறித்தும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும் கிராமப்புற சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் இது ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். கலாச்சார சொத்துக்களை ஆவணப்படுத்துதல் மற்றும் ஊக்குவிப்பதன் மூலம், கலாச்சார அடையாளத்தை வலுப்படுத்துவதையும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2114399
----
TS/SV/KPG/KR/DL
(Release ID: 2114559)