குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு ஆதரவளிக்கும் புதிய திட்டங்கள்
Posted On:
24 MAR 2025 4:42PM by PIB Chennai
2024-25-ம் நிதியாண்டில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் வர்த்தக செயலாக்கம் மற்றும் சந்தைப்படுத்தல் முன்முயற்சியை 2024 27ஜூன்அன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர் மீது சிறப்பு கவனம் செலுத்தி, அவர்களுக்கு பயனளிக்கும் வகையில், மின்னணு வர்த்தகத்திற்கான திறந்தவெளி கட்டமைப்பு மூலம் மின்னணு பொது உள்கட்டமைப்பை மேம்படுத்தி நாட்டில் உள்ள இப்பிரிவு தொழில் நிறுவனங்களிடையே மின்னணு வர்த்தகத்தை பரப்புவதை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயலாக்கம் மற்றும் சந்தைப்படுத்தல் முன்முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ 27.35 கோடி ஆகும்.
இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் தேசிய சிறு தொழில்கள் கழக திட்டத்தை செயல்படுத்தும் முகமையாக நியமித்துள்ளது. நிதியை திறம்பட பயன்படுத்துவதற்காக திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் / பயன்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மின்னணு வர்த்தகத்தின் பயன்கள் குறித்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தேசிய சிறு தொழில்கள் கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம், மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்கள், தொழில் அமைப்புகள் மற்றும் மின்னணு வர்த்தகத்திற்கான திறந்தவெளி கட்டமைப்பு ஆகியவற்றின் ஆதரவுடன் பல்வேறு பயிலரங்குகளை நடத்தி வருகிறது.
மாநிலங்களவையில் இன்று மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்தலஜே பதிலளித்தார்.
***
TS/IR/RR/KR/DL
(Release ID: 2114527)
Visitor Counter : 24