சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
சட்ட விவகாரங்கள் துறையில் சர்வதேச மகளிர் தின சிறப்பு நிகழ்வு
प्रविष्टि तिथि:
24 MAR 2025 3:52PM by PIB Chennai
சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் சட்ட விவகாரங்கள் துறை, புதுதில்லியில் உள்ள சாஸ்திரி பவனின் மாநாட்டு மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது. பாலின சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றோடு எதிர்காலத்தில் அவர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பை சமூகம் அங்கீகரிப்பதற்கான சக்திவாய்ந்த நிகழ்வாக இது அமைந்தது.
இந்த நிகழ்ச்சியில் சட்டத்துறை செயலாளர் டாக்டர் அஞ்சு ரதி ராணா மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு மகளிர் உரிமைகள் மற்றும் அதிகாரமளித்தல் தொடர்பான பிரச்சனைகள் குறித்து பேசினார்கள்.
கூடுதல் செயலாளர் திருமதி சுனிதா மூர்த்தி ஆனந்த் வரவேற்புரை நிகழ்த்தினார். சமூக, பொருளாதார மற்றும் அரசியல் துறைகளில் தீவிரமாக பங்களிக்க பெண்களுக்கு தற்போது சம வாய்ப்புகள் உள்ளன என்பதைக் குறிப்பிட்டார்.
பெண்களின் உரிமைகள் மற்றும் சமத்துவத்திற்காகப் போராடுவதில் சமூகத்தின் கூட்டுப் பொறுப்பை தில்லி சட்ட பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் வாகேஸ்வரி தேஸ்வால் எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2114392
***
TS/IR/RR/KR
(रिलीज़ आईडी: 2114451)
आगंतुक पटल : 43