பாதுகாப்பு அமைச்சகம்
மேற்கு வங்கத்தில் 158 பேஸ் மருத்துவமனையில் ஐந்து நாள் மருத்துவ முகாமில் 350 க்கும் அதிகமானவர்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சை
Posted On:
24 MAR 2025 12:58PM by PIB Chennai
மேற்கு வங்கத்தின் பாக்டோக்ராவில் உள்ள 158 பேஸ் மருத்துவமனைகளில் இம்மாதம் 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெற்று வரும் மருத்துவ முகாமில் முன்னாள் ராணுவத்தினருக்கு அதிநவீன கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 1,752 முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு கண் பாதிப்புகளுக்கான பரிசோதனை செய்யப்பட்டது. புது தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனை (ஆராய்ச்சி மற்றும் மேல்சிகிச்சை), தில்லி கண்டோன்மென்ட் மருத்துவமனை, லக்னோ மருத்துவமனை ஆகியவற்றின் சிறப்பு மருத்துவர்கள் மொத்தமாக 5 நாட்களில் 350- க்கும் மேற்பட்ட கண்புரை அறுவை சிகிச்சைகளை செய்தள்ளனர்.
மேலும், 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு உயர்ரக கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டன. உயர்தர லென்ஸ்கள் பொருத்தப்பட்டுள்ளதன் மூலம், நோயாளிகளுக்கு மிகச் சிறந்த சிகிச்சை கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையின் கீழ் தரமான சுகாதாரப் பராமரிப்பு சேவையை பாதுகாப்பு அமைச்சகம் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கி வருகிறது.
இந்த முகாமின் சிறப்பம்சமாக கண் பாதிப்புக்காக சிகிச்சை மேற்கொள்ள வந்தவர்களில் நேபாளத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் உட்பட மொத்தம் 17 பேருக்கு கண் நோய்களுக்கான பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2114306
----
TS/SV/KPG/KR
(Release ID: 2114435)
Visitor Counter : 27