ஜல்சக்தி அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி: தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் அடையப்பட்ட இலக்குகள்
Posted On:
24 MAR 2025 12:21PM by PIB Chennai
அனைத்து ஊரக வீடுகளுக்கும் கழிப்பறை வசதியை வழங்குவதன் மூலம் 2019 அக்டோபர் 2-க்குள் ஊரகப் பகுதிகளில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையை அடைவதை நோக்கமாகக் கொண்டு தூய்மை இந்தியா இயக்கம் (ஊரகம்) அக்டோபர் 2, 2014 அன்று தொடங்கப்பட்டது. இதன் முதல் கட்டத்தின் கீழ் 10 கோடிக்கும் அதிகமான தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டப்பட்டன. நாட்டின் அனைத்து கிராமங்களும் 2019 அக்டோபர் 2-ம் தேதிக்குள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவையாக தங்களைத் தாங்களே அறிவித்துக் கொண்டன.
தூய்மை இந்தியா இயக்கத்தின் இரண்டாம் கட்டம், 2020 ஏப்ரல் 1 முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையைத் தொடர்ந்து தக்க வைத்தல் மற்றும் கிராமங்களில் திட, திரவக் கழிவு மேலாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. அதாவது, 2025-26-க்குள் கிராமங்களைத் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையிலிருந்து(ஓடிஎஃப்) மேலும் முன்னேற்றமான மாதிரி நிலைக்கு(ஓடிஎஃப் பிளஸ்)மாற்றுவது ஆகும்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு வி. சோமண்ணா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2114291)
TS/PLM/LDN/KR
(Release ID: 2114386)
Visitor Counter : 22