ஜவுளித்துறை அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி: தமிழ்நாட்டில் விருதுநகர் உட்பட நாட்டின் 7 இடங்களில் பிரதமரின் மித்ரா பூங்காக்கள் அமைத்தல்
Posted On:
24 MAR 2025 12:09PM by PIB Chennai
ஜவுளித் தொழிலின் ஒட்டுமொத்த மதிப்புக் கூட்டல் சங்கிலிக்கும் ஒருங்கிணைந்த பெரிய அளவிலான மற்றும் நவீன தொழில்துறை உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் நோக்கில், 2021-22-ம் ஆண்டு முதல் 2027-28-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 4,445 கோடி ரூபாய் திட்ட ஒதுக்கீட்டில் கிரீன்ஃபீல்ட் / பிரவுன்ஃபீல்ட் தளங்களில் 7 பிரதமரின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதி மற்றும் ஆடை பூங்காக்களை(பி.எம். மித்ரா ) அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் விருதுநகர், குஜராத்தில் நவ்சாரி, கர்நாடகாவில் கலபுர்கி, மத்தியப் பிரதேசத்தில் தார், உத்தரபிரதேசத்தில் லக்னோ, தெலங்கானாவில் வாரங்கல், மகாராஷ்டிராவில் அமராவதி ஆகிய 7 பகுதிகளை இப்பூங்காக்களை அமைப்பதற்காக மத்திய அரசு இறுதி செய்துள்ளது. இந்தப் பூங்கா கட்டி முடிக்கப்பட்டால், ஒவ்வொரு பிரதமரின் மித்ரா பூங்காவும் ஜவுளி மதிப்புக் கூட்டல் சங்கிலியின் அனைத்து அம்சங்களிலும் 3 லட்சம் (நேரடி/மறைமுக) வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை பல்வேறு மாநிலங்களுடன் ரூ.18,500 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலீட்டாளர்களால் கையெழுத்திடப்பட்டுள்ளன.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திரு. பபித்ரா மார்கெரிட்டா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2114277)
TS/IR/RR/KR
(Release ID: 2114337)
Visitor Counter : 20