பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பசல கிருஷ்ண பாரதி மறைவுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 23 MAR 2025 11:55PM by PIB Chennai

மகாத்மா காந்தியின் கொள்கைகள் மூலம் நாட்டின் நிர்மாணத்திற்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த காந்தியவாதியான பசல கிருஷ்ண பாரதி மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில் பிரதமர் வெளியிட்டுள்ளதாவது;

"பசல கிருஷ்ண பாரதி அவர்களின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. காந்திய கொள்கைகளுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அவர், பாபுவின் கொள்கைகள் மூலம் நாட்டை நிர்மாணிப்பதற்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்தார். நமது சுதந்திரப் போராட்டத்தின் போது தீவிரமாக செயல்பட்ட தமது பெற்றோரின் பாரம்பரியத்தை அவர் அற்புதமாக முன்னெடுத்துச் சென்றார். பீமாவரத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவரை சந்தித்தது நினைவுக்கு வருகிறது. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி: PM @narendramodi"

"பசல கிருஷ்ண பாரதியின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் தமது வாழ்க்கையை காந்திஜியின் கொள்கைகளுக்காக அர்ப்பணித்ததுடன் பாபுஜியின் மதிப்புகளுடன் நாட்டின் வளர்ச்சிக்காக பணியாற்றினார். நம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பெரும் வழியில் பங்கேற்ற தமது பெற்றோரின் பாரம்பரியத்தை அவர் தொடர்ந்தார். பீமாவரத்தில் ஒரு நிகழ்ச்சியில் அவரைச் சந்தித்தது எனக்கு நினைவிருக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி: பிரதமர் @narendramodi"

***

(Release ID: 2114239)
TS/IR/RR/KR


(Release ID: 2114296) Visitor Counter : 19