நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜிஎஸ்டி பதிவு பிரச்சாரம் 2025 இன் போது பதிவு செய்யப்படாத உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்களிடையே அதிக இணக்கம் மற்றும் விழிப்புணர்வை சிஜிஎஸ்டி தில்லி கிழக்கு ஆணையரகம் ஊக்குவிக்கிறது

प्रविष्टि तिथि: 23 MAR 2025 12:09PM by PIB Chennai

 

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆட்சியின் கீழ் அதிகப் பதிவு மற்றும் இணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (சிஜிஎஸ்டி) தில்லி கிழக்கு ஆணையரகம் 2025 மார்ச் 21-22 அன்று தனது ஜிஎஸ்டி பதிவு பிரச்சாரத்தை வெற்றிகரமாகத் தொடங்கியது.

இந்த முயற்சியானது, ஜிஎஸ்டி துறையில் பதிவுசெய்தல் மற்றும் சட்டத்தின் விதிகளுக்கு இணங்குதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதற்காகும். 

இந்த முன்முயற்சி உள்ளூர் வர்த்தக சமூகத்திடமிருந்து அன்பான மற்றும் ஊக்கமளிக்கும் பதிலைப் பெற்றது, அவர்களில் பலர் முன்னர் பதிவு செய்யப்படாதவர்கள், பெரும்பாலும் தங்கள் பரிவர்த்தனைகளை முதன்மையாக பணமாக நடத்துகிறார்கள், இது இந்தியப் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பிரச்சாரத்தின் போது, வணிகர்களிடமிருந்து 2,000 க்கும் மேற்பட்ட கேள்விகள் ஜிஎஸ்டி அதிகாரிகளால் தீர்க்கப்பட்டன, அவர்கள் பதிவு செயல்முறைக்கு மதிப்புமிக்க உதவிகளை வழங்கினர். பதிவுசெய்யப்படாத வர்த்தகர்கள் கணிசமான எண்ணிக்கையில் தங்கள் வணிகங்களை ஜிஎஸ்டியின் கீழ் தானாக முன்வந்து பதிவு செய்ய முன்வருவதன் மூலம் இந்த இயக்கம் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டது, மேலும் 100 க்கும் மேற்பட்ட பதிவு விண்ணப்பங்கள் உரிய செயல்முறைக்குப் பிறகு அந்த இடத்திலேயே உருவாக்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2114137.

***

PKV/KV

 


(रिलीज़ आईडी: 2114188) आगंतुक पटल : 49
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी