குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் 'காதி சிறப்புக் கண்காட்சி' தில்லியில் தொடங்கியது
Posted On:
22 MAR 2025 8:56PM by PIB Chennai
இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (கே.வி.ஐ.சி), தில்லியில் உள்ள 'காதி மற்றும் கிராமத் தொழில்கள் பவன்' கிளையில் சிறப்பு கண்காட்சி மற்றும் கருவிப்பெட்டி விநியோக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. நிகழ்ச்சியில், கே.வி.ஐ.சி தலைவர் திரு மனோஜ் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கே.வி.ஐ.சி வடக்கு மண்டல உறுப்பினர் திரு நாகேந்திர ரகுவன்ஷி மற்றும் கிழக்கு மண்டல உறுப்பினர் திரு மனோஜ் குமார் சிங் உள்ளிட்ட பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய கே.வி.ஐ.சி தலைவர் திரு மனோஜ் குமார், "பிரதமர் திரு நரேந்திர மோடியின் உத்வேகத்துடன், 'புதிய இந்தியாவின் புதிய காதி' உலகளாவிய அடையாளமாக மாறி வருகிறது. 'தேசத்திற்கு கதர், ஃபேஷனுக்கு கதர், மாற்றத்திற்கு கதர்' என்று தனித்துவமான அடையாளத்தை அளித்து, காதியை தற்சார்பு இந்தியாவின் உயிர்நாடியாக அவர் மாற்றியுள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் 'பிராண்ட் சக்தி', காதி விற்பனை மற்றும் உற்பத்தியில் வரலாறு காணாத அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது என்றும், கைவினைஞர்களின் ஊதியத்தில் 275% உயர்வு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
காதி கைவினைஞர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க அறிவிப்பை வெளியிட்ட அவர், 2025 ஏப்ரல் 1 முதல் காதி கைவினைஞர்களின் ஊதியம் 20 சதவீதம் உயர்த்தப்படும் என்று கூறினார். கடந்த 11 ஆண்டுகளில், மத்திய அரசு காதி கைவினைஞர்களின் ஊதியத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 275 சதவீத உயர்வை செய்துள்ளது. ராட்டையில் நூற்பவர்களுக்கு ரூ.15 வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2114089®=3&lang=1
**************
BR/KV
(Release ID: 2114148)
Visitor Counter : 24