சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்த மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள்
Posted On:
21 MAR 2025 4:01PM by PIB Chennai
தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் திட்ட அமலாக்கத்துறை மூலம் பெறப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் சுகாதார கட்டமைப்பு வசதிகளை அமைத்தல், மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்தல் உள்ளிட்ட பொது சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தொழில்நுட்பம், நிதி உதவியை வழங்குகிறது. இத்திட்டத்திற்கான ஒப்புதலை நடைமுறை ஆவணங்கள், விதிமுறைகளின்படி மத்திய அரசு வழங்குகிறது.
மேலும், தேசிய சுகாதார இயக்கத்துடன் கூடுதலாக, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் சுகாதார உள்கட்டமைப்புக்கான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை தொடங்கியுள்ளது:
பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம் வாயிலாக பொது சுகாதாரம், இதர சுகாதார நடவடிக்கைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில், அதற்கான முதலீடுகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. நோய்களை முன்கூட்டியே கண்டறிவதற்காக கிராமங்கள், நகரங்களில் உள்ள சுகாதார மையங்களை வலுப்படுத்துதல்; மாவட்ட அளவிலான மருத்துவமனைகளில் புதிய தீவிர சிகிச்சைக்கான படுக்கைகளை வசதிகளை ஏற்படுத்துதல்; கூடுதல் கவனம் தேவைப்படும் 11 மாநிலங்களில் உள்ள வட்டார பொது சுகாதார மையங்களை மேம்படுத்துதல், அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த மாவட்ட பொது சுகாதார ஆய்வகங்களை நிறுவுதல் ஆகியவை அடங்கும்.
பதினைந்தாவது நிதிக்குழு சுகாதாரத் துறையின் குறிப்பிட்ட அம்சங்களுக்கு உள்ளூர் நிர்வாகங்கள் மூலம் மானியங்கள் வழங்க பரிந்துரை செய்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் 2021-22-ம் நிதியாண்டு முதல் 2025-26 நிதியாண்டு வரையிலான ஐந்தாண்டு காலத்தில் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக மேம்படுத்தும் நடவடிக்கைகளை எளிதாக்குகிறது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113679
*****
TS/SV/AG/DL
(Release ID: 2113845)
Visitor Counter : 34