ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்றக் கேள்வி: தேசிய கைவினை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமலாக்கப்பட்ட திட்டங்கள்

प्रविष्टि तिथि: 21 MAR 2025 12:18PM by PIB Chennai

மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் உள்ள கைவினைத் தொழில்கள் மேம்பாட்டு ஆணையர் அலுவலகமானது தேசிய கைவினை மேம்பாட்டுத் திட்டம், ஒருங்கிணைந்த கைவினை தொகுப்பு மேம்பாட்டுத் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களை செயல்படுத்துகிறது.

இந்த திட்டங்களின் கீழ் குரு சிஷ்ய கைவினைக்கலைப் பயிற்சி திட்டம், ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டுத் திட்டம், வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு பயிலரங்கு போன்ற பலவகையான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.

இந்த பயிற்சி திட்டங்கள் மூலம் அடிப்படைத் திறன், வடிவமைப்பு மேம்பாடு, திறன் மேம்பாடு ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், கைவினைக் கலைஞர்கள் உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுடன் போட்டியிட தேவையான உபகரணங்கள் அடங்கிய பைகளும், அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் திரு பபித்ர மார்கரிட்டா இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இத்தகவலை தெரிவித்துள்ளார்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113536

***

TS/SMB/SG/RR


(रिलीज़ आईडी: 2113782) आगंतुक पटल : 72
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी