நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2025-26-க்கான வருடாந்தர தரப்படுத்துதல் திட்டம் 2025-26ஐ இந்திய தர நிர்ணய அமைவனம் வெளியிட உள்ளது

Posted On: 21 MAR 2025 11:50AM by PIB Chennai

2025-26-க்கான வருடாந்தர தரப்படுத்துதல் திட்டத்தை  இந்தியத் தர நிர்ணய அமைவனம் வெளியிட உள்ளது. இந்த திட்டத்திற்காக 2025 மார்ச் 5 முதல் 11 வரை சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் இந்த அமைவனம் ஆலோசனைகளை மேற்கொண்டது. இதில் 40 அமைச்சங்கள், 84 தொழில்துறை சங்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் தங்களின் கருத்துகளையும் பரிந்துரைகளையும் பகிர்ந்து கொண்டனர்.

வருடாந்தர தரப்படுத்துதல் திட்டமானது உருவாக்கப்படவுள்ள புதிய தர நிர்ணயங்களையும் வரும் ஆண்டில் திருத்தி அமைக்கப்படவுள்ள தற்போதைய தர நிர்ணயங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் தங்களின் ஆலோசனைகளை பதிவேற்றம் செய்து அவற்றின் முன்னேற்றம் குறித்து அறிந்துகொள்ள இந்திய தரநிர்ணய அமைவனம் டிஜிட்டல் இடைமுகத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.இந்திய தர நிர்ணய அமைவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள 23 ஆயிரத்துக்கும் அதிகமான தர நிர்ணய அளவுகளின் ஏற்பு விகிதத்தை ஊக்கப்படுத்தும் நீடித்த முயற்சிகளுடன் இயைந்ததாக இந்த இடைமுக அறிமுகம் அமைந்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற பங்குதாரர்கள் கூட்டத்தில் உரையாற்றிய இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தலைமை இயக்குநர் திரு பிரமோத் குமார் திவாரி, 2025-26-க்கான வருடாந்தர தரப்படுத்துதல் திட்டம் என்பது தேவை அடிப்படையிலான தர நிர்ணயங்களில் கவனம் செலுத்துவது மட்டுமின்றி தனிச் சிறப்புள்ள விஷயங்களுக்கு முன்னுரிமை அளிப்பதை உறுதி செய்கிறது என்றார். மேலும், இந்த தர நிர்ணயங்கள் பரவலாக ஏற்கப்படுவதற்கும் தடையின்றி அமலாக்கப்படுவதற்கும் ஊக்கமளிக்கின்றன என்றும் அவர் கூறினார்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113528

***

TS/SMB/SG/RR


(Release ID: 2113689) Visitor Counter : 49