ஜவுளித்துறை அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி: சமர்த் மையங்கள் சீரமைப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
21 MAR 2025 12:53PM by PIB Chennai
ஜவுளித் துறையில் (நூல் நூற்பு மற்றும் நெசவு நீங்கலாக) வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் ஊக்கமளிக்கவும் தேவை அடிப்படையிலும் ஜவுளித் தொழிலில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை (சமர்த்) ஜவுளி அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. அங்கீகரிக்கப்பட்ட செயல்படுத்தும் பங்குதாரர்கள் (191) மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது, இதில் பெரும்பான்மையானவை ஜவுளித் தொழில் மற்றும் தொழில்துறை சங்கங்கள் ஆகும். இவை அனைத்து மண்டலங்களிலும் பயிற்சி மையங்களைக் கொண்டுள்ளன. இந்த சமர்த் திட்டத்தின் கீழ் புதிய செயல்படுத்தும் பங்குதாரர்களை பட்டியலிடுவதற்கான முன்மொழிவு கோரிக்கைகள் 31.03.2025 வரை சமர்ப்பிக்கப்படலாம்.
இந்தத் தகவலை மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜவுளித்துறை இணையமைச்சர் திரு. பபித்ரா மார்கெரிட்டா தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113547
***
TS/GK/RJ/RR
(வெளியீட்டு அடையாள எண்: 2113656)
வருகையாளர் எண்ணிக்கை : 51