சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
மத்தியஸ்தம், சமரசம், பூசலுக்கு தீர்வு ஆகியவற்றில் முன்முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
20 MAR 2025 3:23PM by PIB Chennai
மத்தியஸ்தம் மற்றும் சமரசம் உள்ளிட்ட மாற்று பூசல் தீர்வு வழிமுறைகளை அரசு ஊக்குவித்து வருகிறது. ஏனெனில் இந்த வழிமுறைகள் குறைந்த அளவிலான விரோதத் தன்மையுடையவை என்பதுடன், சச்சரவுகளைத் தீர்ப்பதற்கான வழக்கமான முறைகளுக்கு சிறந்த மாற்று வழியை வழங்கும் திறன் கொண்டவை. இந்த வழிமுறைகளை வலுப்படுத்தவும், அவற்றை மேலும் திறமையாகவும், விரைவாகவும் மாற்றுவதற்கான கொள்கை மற்றும் சட்ட தலையீடுகளை அரசு மேலும் முன்னெடுத்து வருகிறது. இது தொடர்பாக கடந்த பல ஆண்டுகளாக மத்திய அரசு முக்கிய முன்முயற்சிகளை எடுத்துள்ளது.
நடுவர் மற்றும் சமரசச் சட்டம், 1996, 2015, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் படிப்படியாக திருத்தம் செய்யப்பட்டு, தற்போது ஏற்பட்டுள்ள சமரச நடவடிக்கைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையிலும், தகராறுகளுக்கு தீர்வு காணும் அமைப்பாக சமரச தீர்ப்பை சாத்தியமாக்கும் வகையிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வணிக நீதிமன்றங்கள் சட்டம், 2015-ல் 2018-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. மற்றவற்றுக்கு இடையில் முன் நிறுவன மத்தியஸ்தம் மற்றும் தீர்வு வழிமுறையை இது ஏற்படுத்துகிறது.
நிறுவன ரீதியான நடுவண் தீர்ப்பாயத்தை எளிதாக்குவதற்காக சுதந்திரமான, தன்னாட்சி மற்றும் உலகத்தரம் வாய்ந்த அமைப்பை உருவாக்கும் நோக்கத்திற்காக இந்திய சர்வதேச மத்தியஸ்த மையத்தை (மையம்) நிறுவவும், இந்த மையத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அறிவிக்கவும் இந்திய சர்வதேச மத்தியஸ்த மைய சட்டம், 2019 இயற்றப்பட்டது.
மத்தியஸ்தச் சட்டம், 2023, சர்ச்சைக்குரிய தரப்பினரால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய மத்தியஸ்தத்திற்கான சட்டமன்ற கட்டமைப்பை வகுக்கிறது. மத்தியஸ்தச் சட்டம், 2023, மத்தியஸ்தம் குறித்த முழுமையான சட்டத்தை வழங்குவதற்கும், நீதிமன்றத்திற்கு வெளியே தகராறுகளைத் தீர்க்கும் கலாச்சாரத்தின் வளர்ச்சியை செயல்படுத்துவதற்கும் ஒரு முக்கிய சட்டமன்றத் தலையீடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. அர்ஜுன் ராம் மேக்வால் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/PKV/RR/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2113431)
வருகையாளர் எண்ணிக்கை : 47