சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
சர்வதேச வன தினம் 2025
प्रविष्टि तिथि:
20 MAR 2025 6:35PM by PIB Chennai
காடுகள் பூமியின் உயிர் நாடியாகத் திகழ்வதோடு லட்சக்கணக்கான மக்களுக்கு ஆக்ஸிஜன், உணவு, மருந்து மற்றும் வாழ்வாதாரங்களை வழங்குகின்றன. அவற்றின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்திற்கு அப்பாற்பட்டு, காடுகள் உலகளாவிய உணவுப் பாதுகாப்பின் தூண்களாகவும் திகழ்கின்றன. பழங்கள், விதைகள், வேர்கள் மற்றும் காட்டு விலங்குகளின் இறைச்சி போன்ற அத்தியாவசியமான வளங்களை வழங்குகின்றன. அவை உள்நாட்டு மற்றும் கிராமப்புற சமூகங்களுக்கு ஆதரவளிக்கின்றன. ஆண்டு தோறும் மார்ச் 21-ம் தேதி, சர்வதேச வன தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தில் அனைத்து வகையான காடுகள், மரங்கள், ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்கும், அவற்றைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதை வலியுறுத்தும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
2012-ம் ஆண்டில், ஐநா சபை மார்ச் 21-ம் தேதியை சர்வதேச வன தினமாக அறிவித்தது. இதனையடுத்து ஆண்டு தோறும் காடுகள் மீதான கூட்டு நடவடிக்கைகள் மூலம் ஒரு புதிய கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டுக்கான கருப்பொருள் "காடுகள் மற்றும் உணவு" என்பதாகும். இது காடுகளுக்கும் உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கும் இடையிலான ஆழமான தொடர்பை வலியுறுத்துகிறது.
இந்தியாவில் வனக் கலாச்சாரமானது பொருளாதாரம், பல்லுயிர் பெருக்கத்துடன் ஆழமாக பின்னிப்பிணைந்துள்ளது. மேலும் அவற்றைப் பாதுகாப்பது, சுற்றுச்சூழல் தேவை என்பது மட்டுமின்றி, நம் அனைவரின் அடிப்படை பொறுப்பாகும். இந்த வகையில், மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் மத்திய அரசின் தொடர்புடைய அமைச்சகங்கள், துறைகள், உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதாரங்களுடன் வனங்களை இணைக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தத் தொடங்கியுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113339
-----
TS/SV/KPG/DL
(रिलीज़ आईडी: 2113414)
आगंतुक पटल : 96