அணுசக்தி அமைச்சகம்
புற்றுநோய் சிகிச்சைக்கான அணுசக்தித்துறையின் முன்முயற்சிகள்
Posted On:
20 MAR 2025 4:19PM by PIB Chennai
புற்றுநோய் சிகிச்சைக்காக அணுசக்தித் துறை பல்வேறு கதிர்வீச்சு அடிப்படையிலான மருத்துவ தயாரிப்புகளை உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது. பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் அணு உலைகள் மூலம் நாட்டில் கதிரியக்க ஐசோடோப்புகள், கதிரியக்க மருந்துகளை தடையின்றி வழங்குவதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய கதிரியக்க மருந்துகளை உருவாக்க பாபா அணு ஆராய்ச்சி மையம் தொடர் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மருத்துவ ரீதியாக நிறுவப்பட்ட கதிரியக்க மருந்துகள், அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகளைக் குறைந்த விலையில் உள்நாட்டிலேயே வடிவமைத்துத் தயாரிப்பதில் அந்த நிறுவனம் சாதனை படைத்துள்ளது. இந்த கதிரியக்க மருத்துவ தயாரிப்புகள் கதிர்வீச்சு மற்றும் ஐசோடோப்பு தொழில்நுட்ப வாரியம் மூலம் தேவைக்கேற்ப விநியோகம் செய்யப்படுகின்றன.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, அணுசக்தித் துறை, இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113253
-----
TS/SV/KPG/DL
(Release ID: 2113360)
Visitor Counter : 20