சுற்றுலா அமைச்சகம்
பிரஷாத் திட்டம்
Posted On:
20 MAR 2025 5:15PM by PIB Chennai
"புனித யாத்திரை புத்துயிர்ப்பு மற்றும் ஆன்மீக, பாரம்பரிய விரிவாக்க இயக்கத்தின்" (பிரஷாத்) கீழ் சுற்றுலா அமைச்சகம் அடையாளம் காணப்பட்ட புனித தலங்களில் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்த மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு நிதி உதவி வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ், சுற்றுலா அமைச்சகம் 27 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 48 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
பிரஷாத் திட்டத்தின் கீழ், உள்கட்டமைப்பு மேம்பாடு, வாழ்வாதாரங்கள், திறன்கள், தூய்மை, பாதுகாப்பு, அணுகல் மற்றும் சேவை வழங்கல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. அனைவரையும் உள்ளடக்கிய, ஒருங்கிணைந்த மற்றும் நிலையான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டம் வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன், விழிப்புணர்வை மேம்படுத்தி, உள்ளூர் சமுதாயத்தினரின் திறன் மேம்பாட்டிற்கு பங்களிக்கிறது.
புனித யாத்திரை சுற்றுலாவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் புனித யாத்திரை அனுபவத்தை வளப்படுத்திய பிரஷாத் திட்டம், வெற்றிகரமான முன்முயற்சிகள் / தலையீடுகள் சுற்றுலா வசதி மையங்கள், ஒலி மற்றும் ஒளி நிகழ்ச்சிகள், பல மாடி கார் பார்க்கிங், பிரத்யேக வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் மலைத்தொடர்களின் மேம்பாடு போன்றவற்றை உள்ளடக்கியதாக உள்ளது. கூடுதலாக, திடக்கழிவு மேலாண்மை அமைப்புகள், சூரிய மின் சக்தி பேனல்கள் மற்றும் சிசிடிவி நிறுவல்கள் ஆகியன நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக செயல்படுத்தப்பட்டுள்ளன.
சுற்றுலாத் தலங்களை உலக அளவில் மேம்படுத்துவதற்காக மூலதன முதலீட்டில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு சிறப்பு நிதியுதவி அளிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளின் கீழ், 23 மாநிலங்களில் ரூ.3295.76 கோடி மதிப்பிலான 40 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டின் சுற்றுலா மையங்களை உருவாக்கி, அவற்றை பிராண்டிங் செய்து, அவற்றை உலக அளவில் சந்தைப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் உள்ளூர் பொருளாதார வளர்ச்சியையும், நிலையான சுற்றுலாத் திட்டங்கள் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரஷாத் திட்டத்தின் கீழ், அடையாளம் காணப்பட்ட புனிதத் தலங்களில் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு சுற்றுலா அமைச்சகம் நிதி உதவி வழங்குகிறது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/PKV/RR/KR/DL
(Release ID: 2113345)
Visitor Counter : 24