மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
பங்குச் சந்தையில் உரிமை கோரப்படாத சொத்துக்களை குறைக்கவும் முதலீட்டாளர் பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (SEBI) டிஜிலாக்கருடன் இணைந்து செயல்படுகிறது
प्रविष्टि तिथि:
19 MAR 2025 5:34PM by PIB Chennai
உரிமை கோரப்படாத நிதி சொத்துக்களின் பிரச்சினையை தீர்க்க பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) உரிமை கோரப்படாத சொத்துக்களை குறைப்பதற்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பாக டிஜிலாக்கரைப் பயன்படுத்துதல் என்ற தலைப்பில் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த முன்முயற்சி முதலீட்டாளர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பயனளிக்கும் ஒரு முக்கிய டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பான டிஜிலாக்கர் மூலம் முதலீட்டாளர்கள் தங்கள் டீமேட், பரஸ்பர நிதி இருப்புகள் பற்றிய தகவல்களை சேமிக்கவும் அணுகவும் உதவுகிறது.
செக்யூரிட்டீஸ் ஹோல்டிங்ஸிற்கான அணுகல்: டிஜிலாக்கர் பயனர்கள் இப்போது தங்கள் டீமேட் கணக்குகளிலிருந்து பங்குகள் மற்றும் பரஸ்பர நிதி அலகுகளுக்கான ஹோல்டிங்ஸ் அறிக்கையை தங்கள் ஒருங்கிணைந்த கணக்கு அறிக்கையுடன் (சிஏஎஸ்) பெறலாம் மற்றும் சேமிக்கலாம். இது ஏற்கனவே உள்ள டிஜிலாக்கர் சேவைகளை விரிவுபடுத்துகிறது.
தடையற்ற அணுகலுக்கான நியமன வசதி, பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு தானியங்கி அறிவிப்பு போன்ற வசதிகளும் இதில் உள்ளன.
***
TS/PLM/AG/DL
(रिलीज़ आईडी: 2113002)
आगंतुक पटल : 77