தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டில் 5ஜி இணைப்பை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை

Posted On: 19 MAR 2025 3:26PM by PIB Chennai

தொலைதூரப் பகுதிகளில் தொலைத்தொடர்பு இணைப்பை அதிகரிக்க டிஜிட்டல் பாரத் நிதி (DBN) திட்டத்தின் நிதியுதவியுடன் மத்திய அரசு கீழ்க்காணும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

வடகிழக்கு பிராந்தியம், அந்தமான் - நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகளில் மொபைல் இணைப்புக்கான விரிவான தொலைத் தொடர்பு மேம்பாட்டுத் திட்டம் (CTDP) ₹4,050 கோடிக்கும் அதிகமான மதிப்பில் செயல்படுத்தப்படுகின்றன.

இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், முன்னேற விரும்பும் மாவட்டங்களில் ₹13,179 கோடிக்கும் அதிகமான மதிப்பில் மொபைல் சேவைகளை வழங்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

₹26,300 கோடிக்கும் அதிகமான மதிப்பில் சேவை இல்லாத கிராமங்களில் 4ஜி மொபைல் சேவைகளை வழங்குவதற்கான 4ஜி செறிவூட்டல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கிராம பஞ்சாயத்துகளுக்கு பிராட்பேண்ட் இணைப்பை வழங்க பாரத்நெட் திட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

தொலைதூர, பழங்குடியினர் பகுதிகள் உட்பட நாட்டில் 5 ஜி இணைப்பை அதிகரிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அக்டோபர் 2022-ல் தொடங்கப்பட்டதிலிருந்து, நாடு முழுவதும் 4.69 லட்சம் 5ஜி பேஸ் டிரான்ஸ்ஸீவர் நிலையங்கள் (BTSs) நிறுவப்பட்டுள்ளன. இது உலகின் 5ஜி மொபைல் சேவைகளில் மிக வேகமாக நிறுவப்பட்ட கட்டமைப்பாகும். தற்போது, நாட்டில் 99.6% மாவட்டங்களில் 5 ஜி மொபைல் சேவைகள் கிடைக்கின்றன. மேலும், கடந்த நிதியாண்டில் (2023-24) 2.95 லட்சம் 5ஜி பிடிஎஸ்-கள் அமைக்கப்பட்டுள்ளன.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தொலைத்தொடர்பு, ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திரசேகர் இத்தகவலைத் தெரிவித்தார்.

***

TS/PLM/AG/DL
 


(Release ID: 2112996) Visitor Counter : 19


Read this release in: English , Urdu , Hindi