விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இயற்கை வேளாண்மை குறித்த இரண்டு நாட்கள் தேசிய கருத்தரங்கு மற்றும் கண்காட்சி

प्रविष्टि तिथि: 19 MAR 2025 4:29PM by PIB Chennai

காஸியாபாத்தில் உள்ள இயற்கை வேளாண்மைக்கான தேசிய மையமானது  2025 மார்ச் 18-19 தேதிகளில் "இயற்கை வேளாண்மை குறித்த இரண்டு நாட்கள் தேசிய கருத்தரங்கு மற்றும் கண்காட்சி"யை நடத்தியது. நிகழ்ச்சி மற்றும் கண்காட்சியை தலைமை விருந்தினராகக் கலந்து கொண்ட மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் இயக்குநர் (நிதி) திரு கே.எம்.எஸ் கல்சா தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவத்தையும், இன்றைய உலகில் அதன் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். இயற்கை வேளாண்மை தொடர்பான திட்டங்களை மேம்படுத்தி செயல்படுத்துவதற்கான ஆதரவு குறித்து முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

தேசிய இயற்கை வேளாண்மை மைய இயக்குநர் டாக்டர் கக்னேஷ் சர்மா உரையாற்றியபோது, இயற்கை வேளாண்மைத் துறையில் இந்த மையத்தின் தற்போதைய நிலை மற்றும் சாதனைகளை அவர் குறிப்பிட்டார். சான்றிதழின் முக்கியத்துவம், தர மேலாண்மை மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவும் இயற்கை பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான சாத்தியமான வாய்ப்புகள் குறித்தும் டாக்டர் சர்மா எடுத்துரைத்தார்.

***

(Release ID: 2112796)
TS/IR/RR/KR


(रिलीज़ आईडी: 2112897) आगंतुक पटल : 48
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी