மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
கால்நடைப் பிரிவில் தனியார் பங்கேற்புக்கான செயல் திட்டம்
Posted On:
19 MAR 2025 2:09PM by PIB Chennai
கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை 2013-ம் ஆண்டில் தேசிய கால்நடைக் கொள்கையை வடிவமைத்தது. கால்நடை பராமரிப்பு துறையின் வளர்ச்சியைத் தடுக்கும் முக்கிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இந்த கொள்கை உருவாக்கப்பட்டது. தீவன உற்பத்தித்திறன், கால்நடை ஆரோக்கியம், கால்நடை விளை பொருட்களைச் சந்தைப்படுத்துதல், பதப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல் ஆகியவற்றிற்கான உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் இதன் முக்கிய அம்சங்களாகும்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் அதே வேளையில், கால்நடை உற்பத்தித்திறனை நிலையான முறையில் அதிகரிப்பதை இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்துறையில் லாபத்தை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சி, மேம்பாட்டு முயற்சிகளை வலுப்படுத்துவதிலும் இது கவனம் செலுத்துகிறது. இக்கொள்கை உள்நாட்டு கால்நடை, கோழியினங்களின் பாதுகாப்பையும் மரபியல் மேம்பாட்டையும் ஊக்குவிக்கிறது.
தேசிய கால்நடை கொள்கை அடிப்படையில், 2021-22 முதல் மறுசீரமைக்கப்பட்ட கீழ்க்கண்ட மூன்று துணை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
• கால்நடை, கோழியின மேம்பாட்டுக்கான துணை இயக்கம்,
• தீவன அபிவிருத்திக்கான துணை இயக்கம்.
• கால்நடை காப்பீடு உள்ளிட்ட ஆராய்ச்சி, புத்தாக்க செயல்பாட்டுடன் விரிவாக்கம் மற்றும் புத்தாக்கத்திற்கான துணை இயக்கம்
இன்று (2025 மார்ச் 19) மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2112691)
TS/PLM/AG/KR
(Release ID: 2112853)
Visitor Counter : 22