எஃகுத்துறை அமைச்சகம்
எஃகு உற்பத்தியில் கோக்கிங் நிலக்கரி பயன்பாடு
प्रविष्टि तिथि:
18 MAR 2025 2:01PM by PIB Chennai
எஃகு ஆலைகளில் தொழில் நுட்ப அபிவிருத்திகள் குறித்த முடிவுகளை வர்த்தக ரீதியான லாபம் மற்றும் சந்தை நிலமைகளை கருத்தில் கொண்டு தனிப்பட்ட ஸ்டீல் ஆலைகளே எடுத்துக் கொள்ளலாம்.
உள்நாட்டு கோக்கிங் நிலக்கரிப் பயன்பாட்டை அதிகரிக்கவும், எரிசக்தித் திறனை மேம்படுத்தவும், இந்திய எஃகுத் துறையில் கரியமில வாயுவின் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நிலக்கரி உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் எஃகு உற்பத்தி தொழிற்சாலைகள் ஆகியவற்றில் நிலக்கரியின் சாம்பல் பயன்பாட்டைக் குறைப்பதற்கும் எஃகு தொழிலில் நிலக்கரிப் பயன்பாட்டைக் குறைப்பதற்கும் உதவிடும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகின்றன. எஃகு ஆலைகளில் பயன்படுத்தப்படும் மின்னேற்றிகள் உள்நாட்டு கோக்கிங் நிலக்கரியின் பயன்பாட்டை அதிகரிக்க உதவிடும்.
எஃகு அமைச்சகம் 2024-ம் ஆண்டில் இந்தியாவில் எஃகு துறையை பசுமையாக்கும் செயல் திட்டம் குறித்து விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது எஃகு துறையில் கரியமில வாயுவின் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான வழிவகைகள் குறித்து விவாதிக்கிறது. எஃகு துறையில் பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான உத்திகளை செயல்படுத்தவும் வகை செய்கிறது. எஃகு அமைச்சகத்தின் இந்த செயல்திட்ட அறிக்கை அதன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய எஃகு, கனரகத் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு. பூபதிராஜு சீனிவாச வர்மா இதனைத் தெரிவித்தார்.
*****
TS/SV/KPG/DL
(रिलीज़ आईडी: 2112540)
आगंतुक पटल : 26