உள்துறை அமைச்சகம்
நக்சலைட் செயல்பாடுகள் மற்றும் வன்முறை
Posted On:
18 MAR 2025 3:32PM by PIB Chennai
இடது சாரி தீவிரவாதப் பிரச்சனையை முழுமையாக நிவர்த்தி செய்வதற்காக, 2015 ஆம் ஆண்டில் தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டம் அங்கீகரிக்கப்பட்டது. இது பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள், மேம்பாட்டு தலையீடுகள், உள்ளூர் சமூகங்களின் உரிமைகளை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய பல்முனை உத்தியை கொண்டுள்ளது.
மத்திய அரசு இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய ஆயுதக் காவல் பட்டாலியன்களை அனுப்புகிறது. மேலும் பயிற்சி மற்றும் மாநில காவல் படைகளை நவீனமயமாக்குவதற்கான நிதி, உபகரணங்கள், ஆயுதங்கள், உளவுத்துறைத் தகவல் பகிர்வு, பலப்படுத்தப்பட்ட காவல் நிலையங்களை நிர்மாணித்தல் போன்றவற்றின் மூலமும் உதவுகிறது. 2014-15 முதல் 2024-25 வரை, பாதுகாப்பு தொடர்பான செலவினத் திட்டத்தின் கீழ் ரூ. 3260.37 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், மாநில புலனாய்வுப் பிரிவுகள், சிறப்புப் படைகள், மாவட்ட காவல்துறைகள், காவல் நிலையங்கள் ஆகியவற்றை வலுப்படுத்த நிதி வழங்கப்படுகிறது.
மேலும், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாதுகாப்பு முகாம்களில் முக்கிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் ஹெலிகாப்டர்களுக்காகவும் 2014-15 முதல் 2024-25 வரையிலான காலகட்டத்தில், இடதுசாரி தீவிரவாதத்தைக் கண்காணிக்கும் மேலாண்மை முகமைகளுக்கு 1120.32 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2112250
***
TS/GK/AG/DL
(Release ID: 2112509)
Visitor Counter : 16