கூட்டுறவு அமைச்சகம்
கூட்டுறவு மூலம் வளமை
Posted On:
18 MAR 2025 3:15PM by PIB Chennai
பிரதமரின் கூட்டுறவு மூலம் வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் வளமான இந்தியாவைக் கட்டமைப்பதற்கென "கூட்டுறவு சங்கங்களுக்கிடையில் ஒத்துழைப்பு " என்ற முன்னோடி திட்டத்தை குஜராத்தின் பனஸ்கந்தா மற்றும் பஞ்ச்மஹால் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா, 2023 மே 21-ம் தேதி தொடங்கி வைத்தார.
கிராமப்புற கூட்டுறவு தொடக்க வங்கிகளுடன், தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களின் அனைத்து நிதி பரிவர்த்தனைகளையும் ஊக்குவிக்கும் வகையிலும் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்துவதற்கும்
இந்த முன்னோடித் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இத்திட்டத்தின் சோதனை நடவடிக்கையாக 2024 ஜனவரி 15 முதல் குஜராத் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
'இதன் கூட்டுறவு சங்கங்களுக்கு இடையிலான நாடு தழுவிய' செயல்பாட்டு நடைமுறைகள் 19.09.2024 அன்று தொடங்கப்பட்டது.
பல்வேறு மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களின் தீவிர பங்கேற்புடன் கூட்டுறவு அமைச்சகம் நாடு முழுவதும் கூட்டுறவுத் துறைக்கு புத்துயிரூட்டவும், வலுப்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் கூட்டுறவு சங்கங்களின் சீரான வளர்ச்சியை இது உறுதி செய்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2112225
-----
TS/SV/KPG/DL
(Release ID: 2112508)