உள்துறை அமைச்சகம்
தில்லிக்கான பேரிடர் மேலாண்மைத் திட்டம்
Posted On:
18 MAR 2025 3:34PM by PIB Chennai
இயற்கைப் பேரிடர் ஏற்பட்டால் மீட்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முதன்மை பொறுப்பு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளைச் சார்ந்தது ஆகும் .கடுமையான இயற்கைப் பேரிடர்கள் மற்றும் மாநில வளங்களின் திறனைத் தாண்டிய பேரிடர்களின் போது மத்திய அரசு, தேவைப்படும் இடங்களில், தளவாடங்கள் மற்றும் நிதி உதவியை வழங்குவதன் மூலம் மாநில அரசுகளின் முயற்சிகளை ஆதரிக்கிறது.
தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் டெல்லி பேரிடர் மேலாண்மைத் திட்டத்தை தயாரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது, இது பூகம்பச் செயல் திட்டம் உட்பட நகரில் ஏதேனும் பேரிடர் ஏற்பட்டால் பேரிடர் தயார்நிலை மற்றும் எதிர்வினைக்கான ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது.
மேலும், கடந்த மாதம் 17-ம் தேதி தில்லியில் பதிவான 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைக் கருத்தில் கொண்டு, ஒரு மறுஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டதாகவும் தில்லி பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் உள்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் திரு நித்யானந்த் ராய் இதைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2112252
***
TS/GK/AG/DL
(Release ID: 2112507)
Visitor Counter : 12