உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாநில மற்றும் தேசிய பேரிடர் நிவாரண நிதி விடுவிப்பு

प्रविष्टि तिथि: 18 MAR 2025 3:35PM by PIB Chennai

தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கையின்படி நிவாரண உதவிகளை வழங்குவது உட்பட பேரிடர் மேலாண்மைக்கான முதன்மை பொறுப்பு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் உள்ளது. இயற்கைப் பேரிடர்களை அடுத்து, மாநில அரசுகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள மாநில பேரிடர் மீட்பு நிதியிலிருந்து நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

விதிமுறைகளின்படி. மத்திய அரசு மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு துணைபுரிவதுடன், தேவையான தளவாடங்கள் மற்றும் நிதி உதவியையும் வழங்குகிறது. 'கடுமையான இயற்கைப் பேரிடர் ஏற்பட்டால், நிர்ணயிக்கப்பட்ட நடைமுறையின்படி, தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து கூடுதல் நிதி உதவி வழங்கப்படுகிறது. 2024-25 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு மாநில மற்றும் தேசிய பேரிடர் நிவாரண நிதியாக மொத்தம் ரூ.1260 கோடி  ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூபாய் 944.80 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2112256

***

TS/GK/AG/DL


(रिलीज़ आईडी: 2112501) आगंतुक पटल : 100
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी