நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான பரஸ்பரக் கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் ரூ.100 கோடி வரையிலான கடன் வசதிக்கு 60% உத்தரவாதத்தை வழங்குகிறது

प्रविष्टि तिथि: 18 MAR 2025 4:54PM by PIB Chennai

தகுதியுள்ள குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உபகரணங்கள் / இயந்திரங்கள் வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட ரூ.100 கோடி வரையிலான கடன் வசதிக்கு 60% உத்தரவாதத்தை வழங்க பரஸ்பர கடன் உத்தரவாதத் திட்டம்  தொடங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறையின் தேசிய கடன் உத்தரவாத ட்ரஸ்ட்டி நிறுவனம் லிமிடெட் செயல்படுத்துகிறது.

மேலும், சிறு வணிகங்கள் மற்றும் தனிநபர் வரி செலுத்துவோருக்கு இணக்கச் சுமையைக் குறைப்பதற்காக நேரடி வரிகள் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை நிதித்துறை இணை அமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரி இன்று ராஜ்யசபாவில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக  அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2112322

***

TS/GK/AG/DL


(रिलीज़ आईडी: 2112490) आगंतुक पटल : 42
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी