சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
பிரதமரின் தொழில் திறன் மற்றும் தகுதி அடிப்படையிலான பயனாளர் திட்ட அபிவிருத்தி
Posted On:
18 MAR 2025 2:05PM by PIB Chennai
பிரதமரின் தொழில் திறன் மற்றும் தகுதி அடிப்படையிலான பயனாளர் திட்ட அபிவிருத்தியானது ஷெட்யூல்டு வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், அறிவிக்கையிலிருந்து நீக்கப்பட்ட வகுப்பினர், நாடோடிகள், பழங்குடியினர், துப்புரவுப் பணியாளர்கள் உட்பட அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவதற்காக 2020-21-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 2022-23-ம் ஆண்டு வரை, இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அல்லது தங்களது சொந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்களின் எண்ணிக்கை விகிதம் 56.40% ஆகும்.
மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மூன்று துறைகளும் இத்திட்டத்தின் கீழ் செயல்படும் முகமைகளாக உள்ளன. பயிற்சியாளர்களால் தெரிவிக்கப்படும் குறைகள் அல்லது பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது இத்துறைகளின் பொறுப்பாகும். இத்திட்டத்தை ஊக்குவிப்பதற்காக, நாடு தழுவிய அளவில் அச்சு மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரம் வெளியிடப்படுகிறது. பயிற்சி நிறுவனங்கள், விழிப்புணர்வு முகாம்களை ஏற்பாடு செய்வதன் மூலமும், குழுக்கள் அமைத்து இத்திட்டம் குறித்து அனைத்துப் பிரிவினரையும் சென்றடையச் செய்யும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்வதன் மூலமும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
திட்ட வழிகாட்டுதல்களின்படி, இத்திட்டத்தின் கீழ் அவற்றை பட்டியலிடுவதற்கான பயிற்சி நிறுவனங்களின் முன்மொழிவுகளை ஆய்வு செய்ய திட்ட மதிப்பீட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு சில அளவுகோல்களின் அடிப்படையில் பயிற்சி நிறுவனங்களின் பெயர்களை ஒப்புதலுக்காக பரிந்துரை செய்கிறது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2112160
----
TS/SV/KPG/KR
(Release ID: 2112373)