அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

விக்யான் தாரா: இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் திட்டம்

प्रविष्टि तिथि: 18 MAR 2025 12:29PM by PIB Chennai

இந்தியாவின் அறிவியல் துறைக்கான எதிர்காலத்தை வலுப்படுத்தும் வகையில் விக்யான் தாரா திட்டத்திற்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரித்துள்ளது. அறிவியல் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப, சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்தும் வகையில் 2024-25-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.330.75 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு, 2025-26-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.1425.00 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு தேசிய முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை வளர்க்கும் அரசின் முடிவை எடுத்துக்காட்டுகிறது.

கல்வி நிறுவனங்களில் மேம்பட்ட ஆராய்ச்சி ஆய்வகங்களை நிறுவுதல், ஆசிரியர் திறன் மேம்பாடு மற்றும் மாணவர் ஆராய்ச்சிக்கு ஆதரவளித்தல், சர்வதேச அறிவியல் ஒத்துழைப்பை ஊக்குவித்தல் உள்ளிட்டவற்றில் விஞ்ஞான் தாரா திட்டம் கவனம் செலுத்துகிறது. மேலும் சர்வதேச இருதரப்பு மற்றும் பல்தரப்பு ஒத்துழைப்பின் மூலம் கூட்டு ஆராய்ச்சியை வளர்த்தலை இது ஊக்குவிக்கிறது.

2025 மார்ச்  நிலவரப்படி, இத்திட்டத்தின் கீழ் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் உட்பட 57,869 தனிநபர் பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2112121

***

TS/GK/AG/KR


(रिलीज़ आईडी: 2112228) आगंतुक पटल : 122
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati