பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் தலைமை இயக்குநர் மார்ச் 19 முதல் ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொள்கிறார்

Posted On: 18 MAR 2025 10:40AM by PIB Chennai

பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ்.ராணா 2025 மார்ச் 19 முதல் 21 வரை ஆஸ்திரேலியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இருதரப்பு பாதுகாப்பு புலனாய்வு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதும், இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான உத்திபூர்வ ஈடுபாட்டை மேம்படுத்துவதும் இந்த பயணத்தின் நோக்கமாகும்.

இப் பயணத்தின் போது, ஆஸ்திரேலிய தேசிய புலனாய்வு அமைப்பின் தலைமை இயக்குநர், ஆஸ்திரேலிய பாதுகாப்பு படையின் கூட்டு நடவடிக்கை தலைவர், பாதுகாப்புத் துறை துணை செயலாளர் உள்ளிட்ட ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறையின் உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் தலைமை இயக்குநர் கலந்துரையாடுவார். இந்த உயர்மட்ட கலந்துரையாடல்கள் உளவுத்துறை பகிர்வு வழிமுறைகள், பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் மேலும் ஒத்துழைப்புக்கான வழிவகைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.

***

(Release ID: 2112082)
TS/IR/RR/KR

 


(Release ID: 2112172) Visitor Counter : 12


Read this release in: English , Urdu , Hindi