சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் ஓய்வுநேர சுற்றுலாவை ஊக்குவித்தல்

Posted On: 17 MAR 2025 3:49PM by PIB Chennai

குடியேற்றப் பணியகத்தின் தரவுகளின்படி, 2023-ம் ஆண்டில் இந்தியாவுக்கு  9.52 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர்.இது 2022-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 47.90% அதிகரித்துள்ளது. 2023-ம் ஆண்டில் ஓய்வு நேரம் , விடுமுறை மற்றும் பொழுதுபோக்கு ஆகிய வகையில் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4.40 மில்லியனாக இருந்தது. இது 2022-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 86.96 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதேபோல், வணிக மற்றும் தொழில்முறை நோக்கங்களுக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2023-ம் ஆண்டில் 0.98 மில்லியனாக இருந்தது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 49.66 சதவீதம் கூடுதலாகும்.

பெருந்தொற்று காலத்திற்கு முன்பு இருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வரவோடு ஒப்பிட‌ இந்தியா  87.1 சதவீதத்தை இப்போது எட்டியுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது பெருந்தொற்றுக்குப் பிந்தைய மறுமலர்ச்சி, மாறுபட்ட, கலாச்சார ரீதியிலான வளமான சுற்றுலாத் தலமாக இந்தியா திகழ்கிறது என்ற நம்பிக்கை ஆகியவற்றால் ஏற்பட்டுள்ளது.  மேம்படுத்தப்பட்ட விமானச் சேவைகள், முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைப்பதுடன், சுற்றுலாத் தலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகள் சுற்றுலாப் பயணிகளின் அனுபவங்களை அதிகரிக்கவும் செய்துள்ளன. கூடுதலாக, உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைப்படுத்துதல் நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவின் சுற்றுலாத் துறையானது உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நாடாக இந்தியாவை முன்னணி இடத்தில் நிலைநிறுத்தியுள்ளது.

இந்தியாவில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க மத்திய சுற்றுலா அமைச்சகம் பல்வேறு முன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2111811

***

TS/SV/RJ/DL


(Release ID: 2111973) Visitor Counter : 23


Read this release in: English , Urdu , Hindi