ஜல்சக்தி அமைச்சகம்
நாடாளுமன்ற கேள்வி: ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் மொத்த குழாய் நீர் இணைப்புகள் குறித்த தகவல்கள்
Posted On:
17 MAR 2025 4:50PM by PIB Chennai
ஆகஸ்ட் 2019 முதல், மத்திய அரசு மாநிலங்களுடன் இணைந்து ஜல் ஜீவன் இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது.
மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் குழாய் இணைப்புகளை கண்காணிப்பதற்காக, ஜல்சக்தித் துறை ஒரு வலுவான இணைய தள தகவல் பலகையை உருவாக்கியுள்ளது. இது மாநிலம் / யூனியன் பிரதேசம், மாவட்ட, கிராம வாரியான முன்னேற்ற தகவலை வழங்குகிறது.
இதற்கான இணையதள இணைப்பு- https://ejalshakti.gov.in/jjmreport/JJMIndia.aspx
தண்ணீர், ஒரு மாநில விஷயமாக இருப்பதால், குழாய் மூலம் நீர் வழங்கல் திட்டங்களை திட்டமிடுவதற்கும் செயல்படுத்துவதற்குமான முதன்மை பொறுப்பு அந்தந்த மாநிலம் / யூனியன் பிரதேசங்களிடம் உள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு வி. சோமண்ணா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/PLM/AG/DL
(Release ID: 2111969)
Visitor Counter : 12