ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற கேள்வி: ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் பஞ்சாப் மாநிலத்திற்கான நிதி

प्रविष्टि तिथि: 17 MAR 2025 4:51PM by PIB Chennai

மத்திய நிலத்தடி நீர் வாரியம் (CGWB) அதன் நிலத்தடி நீர் தர கண்காணிப்பு திட்ட ஆய்வுகளின் ஒரு பகுதியாக பஞ்சாப் மாநிலம் உட்பட அனைத்து பிராந்திய அளவிலும் நிலத்தடி நீர் தர தரவுகளை உருவாக்குகிறது. மத்திய நிலத்தடி நீர் வாரியத்தால் (CGWB) சமீபத்தில் வெளியிடப்பட்ட வருடாந்திர நிலத்தடி நீர் தர அறிக்கை – 2024-ஐ https://cgwb.gov.in/cgwbpnm/public/uploads/documents/17363272771910393216file.pdf என்ற இணையதள இணைப்பில் பார்க்கலாம்.  

கிராமப்புற வீடுகளுக்கு போதுமான அளவில், பரிந்துரைக்கப்பட்ட தரத்தில், பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்காக மாநிலங்களுடன் இணைந்து ஜல் ஜீவன் இயக்கத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

2025-26 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், ஜல் ஜீவன் இயக்கம் 2028 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டில் ஜல்-ஜீவன் இயக்கத்திற்கு 67,000 கோடி ரூபாய்க்கான உத்தேச பட்ஜெட் மதிப்பீட்டை நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.  ஜல்-ஜீவன் இயக்கத்திற்கு பஞ்சாப் மாநிலத்திற்கு கடந்த 6 நிதியாண்டுகளில் மொத்தம் 5,773.66 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு வி. சோமண்ணா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

TS/PLM/AG/DL


(रिलीज़ आईडी: 2111968) आगंतुक पटल : 32
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी