சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பின்தங்கிய, நலிவடைந்த பிரிவினருக்கு பல்வேறு அரசு நலத் திட்டங்கள் கிடைப்பதை உறுதி செய்வதை பிரதமரின் புதிய 15 அம்ச திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது
Posted On:
17 MAR 2025 3:37PM by PIB Chennai
சிறுபான்மையினர் நலனுக்கான பிரதமரின் புதிய 15 அம்சத் திட்டம் சிறுபான்மையினர் நல அமைச்சகத்தால் 2006 ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மத்தியில் அறிவிக்கை செய்யப்பட்ட ஆறு சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பின்தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினர்களுக்கு பல்வேறு அரசின் நலத்திட்டங்களின் பலன்கள் கிடைப்பதற்கும் நாட்டின் ஒட்டுமொத்த சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கும் சம வாய்ப்புகள் தரப்படுவதை உறுதி செய்யும் நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பங்கேற்கும் அமைச்சகங்கள் / துறைகளின் பல்வேறு திட்டங்கள் / முன்முயற்சிகளை உள்ளடக்கிய ஒரு விரிவான திட்டமாகவும் இது உள்ளது.
சிறுபான்மையினர் நல அமைச்சகம் 15 அம்சத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தி வரும் திட்டங்கள் அறிவிக்கை செய்யப்பட்ட சிறுபான்மையினருக்கானவை ஆகும். மேலும், பங்கேற்கும் பிற அமைச்சகங்கள் / துறைகளால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் / முன்முயற்சிகளின் ஒதுக்கீடு மற்றும் இலக்குகளில் 15% அறிவிக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான திட்டங்கள் உட்பட சிறுபான்மையினர் நல அமைச்சகத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
பத்தாம் வகுப்புக்கு முந்தைய கல்வி உதவித்தொகை திட்டம் (சிறுபான்மையினர் நல அமைச்சகம்)
பத்தாம் வகுப்புக்கு பிந்தைய கல்வி உதவித்தொகை திட்டம் (சிறுபான்மையினர் நல அமைச்சகம்)
தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டம் (சிறுபான்மையினர் நல அமைச்சகம்)
தேசிய சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதிக் கழகத்தின் கடன் திட்டங்கள்
பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் ( ஊரக மேம்பாட்டு அமைச்சகம்) உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2111794
***
TS/IR/LDN/KR
(Release ID: 2111961)