அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைமைச்செயல் அதிகாரியாக (CEO) டாக்டர் சிவக்குமார் கல்யாணராமன் பொறுப்பேற்றார்

प्रविष्टि तिथि: 17 MAR 2025 2:24PM by PIB Chennai

அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (ஏஎன்ஆர்எஃப்) பொறுப்பு தலைமைச்செயல் அதிகாரியாக (சிஇஓ) செயல்பட்டு வந்த அறிவியல் -தொழில்நுட்பத் துறையின் (டிஎஸ்டி) செயலாளர் பேராசிரியர் அபய் கரண்டிகர், அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் சிவகுமார் கல்யாணராமனிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

இதன் மூலம், டாக்டர் சிவகுமார் ஏஎன்ஆர்எஃப்-ன் தலைமைச் செயல் அதிகாரியாகச் செயல்படுவார். இது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவித்தல், வளர்த்தெடுத்தல், மேம்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும். அத்துடன் இந்தியப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் கண்டுபிடிப்பு கலாச்சாரத்தை வளர்ப்பதை இந்த அறக்கட்டளை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஆசியாவின் எரிசக்தி துறையின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பதவியை வகித்த டாக்டர் சிவகுமார், சென்னை ஐஐடி, ஓஹியோ பல்கலைக்கழகம் ஆகியவற்றின்  முன்னாள் மாணவர் ஆவார்.

புதிய தேசிய கல்விக் கொள்கையின் (NEP) பரிந்துரைகளின்படி நாட்டில் அறிவியல் ஆராய்ச்சியின் உயர்மட்ட உத்திசார் வழிகாட்டுதலை வழங்குவதற்கான உச்ச அமைப்பாக ஏஎன்ஆர்எஃப் செயல்படுகிறது.

***

TS/PLM/AG/KR/DL


(रिलीज़ आईडी: 2111948) आगंतुक पटल : 64
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी