பிரதமர் அலுவலகம்
முன்னாள் மத்திய அமைச்சர் தேபேந்திர பிரதான் மறைவுக்குப் பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
17 MAR 2025 3:15PM by PIB Chennai
முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் தேபேந்திர பிரதான் மறைவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். வறுமை ஒழிப்பு, சமூக அதிகாரமளித்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் டாக்டர் தேபேந்திர பிரதான் செயல்பட்டதாகவும், அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்றும் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
"தேபேந்திர பிரதான் கடின உழைப்பாளியாகவும்பணிவான தலைவராகவும் முத்திரை பதித்தவர். ஒடிசாவில் பிஜேபி-யை வலுப்படுத்த அவர் பல முயற்சிகளை மேற்கொண்டார். வறுமை ஒழிப்பு, சமூக அதிகாரமளித்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் செயல்பட்ட அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது. நேரில் சென்று அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தேன். ஓம் சாந்தி."
***
TS/PLM/AG/KR/DL
(रिलीज़ आईडी: 2111946)
आगंतुक पटल : 41
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam